மார்த்தாண்டம் அருகே வெட்டுவெந்நி வழியாக கேரளாவிற்கு கடத்த முயன்ற 400 கிலோ ரேஷன் அரிசி மற்றும் பயணிகள் ஆட்டோவை வட்டவழங்கல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரி தினேஷ் சந்திரன் தலைமையிலான குழுவினர் மார்த்தாண்டம் அருகே வெட்டுவெந்நி பகுதியில் வாகன கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மார்த்தாண்டத்தில் இருந்து களியக்காவிளை நோக்கி அதிவேகமாக வந்து கொண்டிருந்த பயணிகள் ஆட்டோவை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தினர். அப்போது டிரைவர் ஆட்டோவை நிறுத்திவிட்டு தப்பி ஓடினார்.
ஆட்டோவை சோதனை செய்து பார்த்தபோது 400 கிலோ ரேஷன் அரிசி இருந்ததும், கேரளாவிற்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதைதொடர்ந்து 400 கிலோ ரேஷன் அரிசியும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோவையும் பறிமுதல் செய்த அதிகாரிகள் ஆட்டோவை விளவங்கோடு தாலுகா ஆபீசிலும், அரிசியை காப்புக்காடு அரிசி குடோனிலும் ஒப்படைத்தனர்.






0 Comments