வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த கீழ்ஆழத்தூர் பகுதியை சேர்ந்தவர் புருசோத்தமன். இவர் ஜம்மு-காஷ்மிரில் ராணவ வீரர் பணிபுரிந்து வந்தார். இவரது தந்தை ஆறுமுகம் உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை பார்க்க வந்த புருஷாத்தமன் மருத்துவமனை அருகிலே தன் மனைவியுடன் அறையெடுத்து தங்கியிருந்தார்.

இந்த நிலையில், காலை நீண்ட நேரமாகியும் இருவரும் அறையை விட்டு வெளியே வரவில்லை என தெரிகிறது. ஊழியர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த மின்விசிறியில் தூக்கில் தொங்கியபடி புருஷோத்தமனும், கட்டிலில் மனைவி அமுலுவும் சடலமாக கிடந்துள்ளனர். அமுல் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தவர். நிகழ்விடன் விரைந்த போலீசார் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.






0 Comments