காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவரும் சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினருமான கார்த்திக் சிதம்பரத்துக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதில் பொதுமக்கள் மட்டுமின்றி கொரோனாவை எதிர்த்துப் போராடும் மருத்துவர்கள் அரசியல் தலைவர்கள் என அனைவருக்கும் கொரோனா பரவி வருகிறது.
இதனால் பல்வேறு மாநிலங்களில் முதலமைச்சர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநிலங்கள் மற்றும் மக்களவை உறுப்பினர்கள் என பலரும் வைரஸ் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இந்த வரிசையில் சிவகங்கை தொகுதி மக்களைவை உறுப்பினர் கார்த்திக் சிதம்பரமும் இணைந்துள்ளார்.
48 வயதாகும் கார்த்திக் சிதம்பரத்துக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து லேசான அறிகுறிகளுடன் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யபட்டுள்ளது. எனது அறிகுறிகள் லேசானவை, மருத்துவ ஆலோசனையின்படி நான் வீட்டு தனிமைப்படுத்தலின் கீழ் இருக்கிறேன். சமீபத்தில் என்னுடன் தொடர்பு கொண்ட அனைவரும் மருத்துவ பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன், என பதிவிட்டுள்ளார்.
முன்னதாக நாகை எம்.பி செல்வராசுவிற்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்படிருந்த நிலையில் தமிழகத்தில் பாதிக்கப்படும் 2வது எம்.பி ஆனார் கார்த்தி சிதம்பரம்.






0 Comments