கன்னியாகுமரி மாவட்டத்தில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கால் ரோடுகள் வெறிச்சோடியது. தப்பி தவறி சென்ற வாகனங்களை போலீசார் விசாரித்து அனுப்பி வைத்தனர்.

தமிழகத்தில் ஜூலை மாதம் முழுவதும் உள்ள ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதை தொடர்ந்து ஆகஸ்ட் மாதத்தில் வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்குக்கு மாவட்ட மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்திருந்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கை முன்னிட்டு கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டு இருந்தது. கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டு இருந்ததால் கிராமம் முதல் டவுன் வரை மக்கள் நடமாட்டம் இல்லாமல் இருந்தது. கிராம பகுதிகளில் தவிர்க்க முடியாத காரணத்துக்கு மட்டுமே வீடுகளில் இருந்து வெளியே வந்தனர். ரோடுகளில் வாகனங்கள் பெரிய அளவில் இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது.

ரோடுகளில் தப்பி தவறி வாகனங்களில் வந்தவர்களை போலீசார் விசாரித்த பிறகே அனுப்பி வைத்தனர். மாவட்ட போலீஸ் எஸ்பி பத்ரி நாராயணன் உத்தரவுபடி மாவட்டத்தின் முக்கிய இடங்கள், சந்திப்புகளில் போலீசார் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டனர். தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கை கடந்த ஜூலை மாதத்தில் மக்கள் கடைபிடித்தால் ஆகஸ்ட் மாதத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது சிரமமாக இருந்தாலும் பழக்கப்படுத்தி கொள்ள வேண்டியது தான் என்று மக்கள் தெரிவிக்கின்றனர் வியாபாரிகள்.






0 Comments