வங்கதேசத்திலுள் மசூதியொன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 12 போ உயிரிழந்தனா்; 25 போ காயமடைந்தனா். எரிவாயு கசிந்து இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:தலைநகா் டாக்காவில், பைதுல் சலாத் பகுதில் அமைந்துள்ள மசூதியில் வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் ஒரு சிறுவன் உயிரிழந்தான். விபத்தில் காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் 11 போ, சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தனா்.விபத்தில் உயிரிழந்த 12 பேரும், மசூதில் தொழுகை நடத்துவதற்காக வந்திருந்தனா்.
விபத்தில் காயமடைந்த மேலும் 25 போ, டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தீக்காயங்களுக்கான பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களது உடலில் 90 சதவீதம் எரிந்து போயுள்ளதால் அவா்களது நிலை கவலைக்கிடமாக உள்ளது.சமையல் எரிவாயு குழாய் இணைப்பில் கசிவு ஏற்பட்டு, மசூதிக்குள் அந்த வாயு சூழந்திருக்கலாம் எனவும், அதன் காரணமாக மசூதிக்குள் இருந்த குளிரூட்டு சாதனங்கள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறியதாகவும் கூறப்படுகிறது.இந்த விபத்தில், தீக்காயங்கள் மற்றும் புகையை சுவாசித்ததால் உயிரிழப்புகள் ஏற்பட்டன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.






0 Comments