சென்னையில் நகைக் கடையில் 14 கிலோ தங்கம் திருடு போன சம்பவத்தில் உரிமையாளரின் மகனே திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.

சென்னை சவுகார்பேட்டை என்.எஸ்.சி போஸ் சாலையில் சங்கம் கிராஃப்ட் என்ற தங்க நகைக்கடை இயங்கி வருகிறது. கடந்த 21ஆம் தேதி அந்த நகைக் கடையில் 14 கிலோ நகைகள் காணாமல் போனது. இது தொடர்பாக கடையின் உரிமையாளர்கள் ராஜ்குமார், சுபாஷ் போத்ரா ஆகியோர் யானைகவுனி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அங்கு இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அங்கு பதிவாகி இருந்த சிக்னல்களையும் ஆய்வு செய்தனர். அதனை பார்த்த காவல்துறை அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதில், நகைக் கடை உரிமையாளர்களில் ஒருவரான சுபாஷ் போத்ராவின் மகன் ஹர்ஷ் போத்ரா நகைகளை திருடியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து ஹர்ஷ் போத்ராவை யானைகவுனி போலீசார் கைது செய்தனர்.






0 Comments