கொரோனா காலத்தில் மத்திய அரசு அமல்படுத்திய மக்கள் நலதிட்டங்களை விளக்கி கன்னியாகுமரி முதல் சென்னை வரையிலான பிரசார யாத்திரை தொடங்கியது.

தமிழ்நாடு ஏகத்துவ ஜமாஅத் சார்பில் கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு துவங்கிய நிகழ்ச்சிக்கு மாவட்ட பாஜக தலைவர் தர்மராஜன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் முத்துராமன் முன்னிலை வகித்தார். தொழில் பிரிவு செயலாளர் சுபாஷ் வரவேற்றார். தமிழ்நாடு ஏகத்துவ ஜமாஅத் மாநில தலைவர் இப்ராஹிம் தலைமையில் 22 மாவட்டங்கள் வழியாக சென்னை மெரினாவில் நிறைவடையும் இந்த பிரசார யாத்திரையை முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.






0 Comments