மருத்துவ உதவி கல்விக்கான நிதி உதவி வழங்கிய குமரி மாவட்டம் சிந்தனை கூட்டமைப்பு உதவும் கரங்களுக்கு பாராட்டு
மருத்துவ உதவி, கல்விக்கான நிதி உதவி, திருமண நிதி உதவி என எந்த உதவியாக இருந்தாலும் முன்னின்று வாரி வழங்குவதில் கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு உதவும் கரங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக நேற்று குளச்சல் முஸ்லிம் ஜமாஅத்தை சார்ந்த குளச்சல் மார்க்கெட் ரோட்டில் குடும்பமாக வசிக்கும் சகோதரி சலீமா பீவி கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு உதவும் கரங்களுக்கு ஒரு மனு அளித்திருந்தார் தன்னுடைய கணவர் ஆறுமாத காலங்களாக இருதயநோயால் இருதய வால்வு பிரச்சினைகளில் தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார், நான் ஒரு பள்ளியில் ஆயா வேலை பார்த்து வருகிறேன் என்னால் இயன்ற அளவு செலவு செய்து பார்த்துவிட்டேன் இப்போது என்னால் முடியாத காரணத்தினால் உங்களிடம் உதவி கேட்கிறேன் என்னுடைய கணவரின் மருத்துவச் செலவிற்கு உதவுமாறு கோரி மனு அளித்திருந்தார் அந்த மனுவை விசாரித்த கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு உதவும் கரங்கள் கமிட்டி அந்த சகோதரியின் கணவருக்கு மருத்துவ செலவுக்காக ரூபாய் 15 ஆயிரம் உடனே வழங்குவது என முடிவெடுத்து நேற்று 31. 8. 2020 மாலை 5 மணிக்கு மேற்படி சகோதரியின் இல்லம் சென்று அவருடைய கணவரை நேரில் பார்த்து அவர்கள் கையில் கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பின் உதவும் கரங்கள் சார்பாக ரூபாய் 15 ஆயிரம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் இப்ராஹிம் கான், தலைவர் எம்.மீரான் மைதீன், பொதுச்செயலாளர் P.ஹிமாம் பாதுஷா, உதவும் கரங்கள் கமிட்டித் தலைவர் இன்ஜினியர் ஷேக் முஹம்மத், மாவட்ட இளைஞரணி செயலாளர் எஸ்.ஏ.முகம்மது அயூப் கான்,
மாவட்ட துணைச் செயலாளர் M. A. R. நாசர், மாவட்ட துணை தலைவர் பீர்முகம்மது, நாகர்கோவில் மாநகர தலைவர் ஜாஹிர் உசேன்,மாவட்ட கல்வி குழு துணைத் தலைவர் M. A. நாசர்(அஸ்லி), மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஹாஜி நைனா முகம்மது, செய்யது முகம்மது, மாவட்டஆலோசனை கமிட்டி உறுப்பினர் அன்வர் சாதத், இஸ்லாமிய வக்கீல் அணி பொருளாளர் வழக்கறிஞர் ராஷிக்கான், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை தலைவர் தாஹா பாரூக். குளச்சல் நகர துணைத் தலைவர் பாபுல் உசைன், பொருளாளர் அசரப், குளச்சல் நகர இளைஞரணி தலைவர் சமீனுத்தீன், நகர தொழில் நுட்ப பிரிவு தலைவர் பிஸ்மி, சனா சாகுல் ஹமீது, உபைஸ் கர்னி, சாகுல் ஹமீது. மணவாளக்குறிச்சி கிளை தலைவர் முஹம்மது ராபி, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் அஸ்கர் உள்ளிட்ட பெருவாரியான நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்.






0 Comments