கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு சார்பாக நேற்றைய தினம் குமரி மாவட்டம் சேவியர் காலேஜில் பயின்று நாசா செல்ல தேர்வாகியுள்ள குளச்சல் முஸ்லிம் ஜமாஅத்தை சார்ந்த மாணவி பர்ஹானா அவர்களை அவர்களது இல்லம் சென்று கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு சார்பாக பாராட்டி கேடயம் சான்றிதழ் பொன்னாடை போர்த்தி கவுரவிக்கபட்டது , அத்தோடு அந்த மாணவியிடம் நாசா சென்று பயின்று வெற்றியுடன் குமரி மாவட்டம் திரும்பியதும் அவர் பயின்ற சேவியர் காலேஜில் வைத்தே கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு சார்பாக ஒரு பிரம்மாண்டமான பாராட்டு நிகழ்ச்சி நடத்தப்படும் என வாழ்த்தி வாக்குறுதி அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் இப்ராஹிம் கான், தலைவர் எம்.மீரான் மைதீன், பொதுச்செயலாளர் P.ஹிமாம் பாதுஷா, உதவும் கரங்கள் கமிட்டித் தலைவர் இன்ஜினியர் ஷேக் முஹம்மத், மாவட்ட இளைஞரணி செயலாளர் எஸ்.ஏ.முகம்மது அயூப் கான்,

மாவட்ட துணைச் செயலாளர் M. A. R. நாசர், மாவட்ட துணை தலைவர் பீர்முகம்மது, நாகர்கோவில் மாநகர தலைவர் ஜாஹிர் உசேன்,மாவட்ட கல்வி குழு துணைத் தலைவர் M. A. நாசர்(அஸ்லி), மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஹாஜி நைனா முகம்மது, செய்யது முகம்மது, மாவட்டஆலோசனை கமிட்டி உறுப்பினர் அன்வர் சாதத், இஸ்லாமிய வக்கீல் அணி பொருளாளர் வழக்கறிஞர் ராஷிக்கான், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை தலைவர் தாஹா பாரூக். குளச்சல் நகர துணைத் தலைவர் பாபுல் உசைன், பொருளாளர் அசரப், குளச்சல் நகர இளைஞரணி தலைவர் சமீனுத்தீன், நகர தொழில் நுட்ப பிரிவு தலைவர் பிஸ்மி, சனா சாகுல் ஹமீது, உபைஸ் கர்னி, சாகுல் ஹமீது. மணவாளக்குறிச்சி கிளை தலைவர் முஹம்மது ராபி, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் அஸ்கர் மாநகர தகவல் தொழில்நுட்பபிரிவு துணை தலைவர் முஹம்மது தாஹிர் உள்ளிட்ட பெருவாரியான நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்.