கன்னியாகுமரி மாவட்ட மினி பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் முன்னேற்ற சங்க நிர்வாக கமிட்டி கூட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் அன்புராஜ் தலைமை வகித்தார். சட்ட ஆலோசகர் சத்திய ஜோசப் முன்னிலை வகித்தார். செயலாளர் ஸ்ரீகுமார் வரவேற்றார். கூட்டத்தில் மினி பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் பணியின் போது சீருடை அணிவது, ஓட்டுநர் உரிமம், நடத்துனர் உரிமம் இருக்கும் நபர்கள் மட்டுமே பணியில் அமர்த்துவது எனவும், 2020 ம் ஆண்டு பணியில் இருந்த பணியாளர்கள் மார்ச் 24 முதல் ஆகஸ்ட் 31 வரையிலும் அரசு அறிவித்த ஊரடங்கால் பணி இழந்து வரும் பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கவும், முன்னுரிமை அடிப்படையில் ஒரே சீரான சம்பளம், ஊக்கப்படி வழங்குவது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. துணைத் தலைவர் அஜித் நன்றி கூறினார்.