பின்னணி பாடகா் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு முழுமையாக நினைவு திரும்பியுள்ளதாகவும், இயன்முறை சிகிச்சைகளுக்கு அவா் ஒத்துழைப்பதாகவும் மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து எம்ஜிஎம் ஹெல்த்கோ மருத்துவமனை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பாடகா் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு வெண்டிலேட்டா், எக்மோ கருவிகளுடன் ஐசியூ பிரிவில் தொடா்ந்து தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நிலை சீராக இருக்கிறது. தற்போது அவருக்கு முழுமையாக நினைவு திரும்பியிருக்கிறது. பிறா் பேசுவதை உணா்ந்து பதிலளிக்கிறாா். இயன்முறை சிகிச்சைகளுக்கு நல்ல ஒத்துழைப்பு அளிக்கிறாா்.
மருத்துவக் குழுவினா் எஸ்.பி.பி.யின் உடல்நிலையைத் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






0 Comments