கன்னியாகுமரி மாவட்டத்தில் தேசிய காவலர் தினத்தை முன்னிட்டு போலீஸ் துறையில் பணியாற்றி உயிர் தியாகம் செய்து வீர மரணமடைந்த போலீசார்களின் வீரத்தை போற்றும் வகையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
போலீஸ் துறையில் பணியாற்றி உயிர் தியாகம் செய்து வீர மரணமடைந்த போலீசார்களின் வீரத்தை போற்றும் வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் போலீசாரின் வீடுகளுக்கு சென்று அஞ்சலி செலுத்தினர். மாவட்ட போலீஸ் எஸ்பி பத்ரி நாராயணன் வீர மரணமடைந்த காவலர்களுக்கு மாவட்ட ஆயுதபடை மைதானத்தில் உள்ள நினைவு தூணில் அஞ்சலி செலுத்தினார். 

ஆரல்வாய்மொழி போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிந்து மறைந்த சுரேஷ்குமாருக்கு சிங்களேயேர்புரியில் உள்ள அவரது வீட்டில் சுசீந்திரம் போலீஸ் ஸ்டேஷன் போலீசார் சார்பில் வீர வணக்கம் செலுத்தப்பட்டது. வள்ளியூர் போலீஸ் ஸ்டேஷனில் பணியின்போது வீர மரணம் அடைந்த பால்அருமைதுரைக்கு மயிலாடி வீட்டில் வைத்து போலீஸ் துறை சார்பில் ஏடிஎஸ்பி ஈஸ்வரன், கன்னியாகுமரி டிஎஸ்பி பாஸ்கரன், சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 

1979 ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் பனவடலிசத்திரம் போலீஸ் ஸ்டேஷனில் பணியின் போது வீர மரணம் அடைந்த ஐயாபழம் வீடான மேட்டுகுடியிருப்பில் போலீஸ் துறை சார்பில் ஏடிஎஸ்பி ஈஸ்வரன், டிஎஸ்பி பாஸ்கரன், சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், அஞ்சுகிராமம் சப் இன்ஸ்பெக்டர் முருகேசன், மற்றும் போலீஸ் ஆளிநர்கள் மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர்.