கடந்த 5-ம் தேதி லடாக் பகுதியில் சீன ராணுவ வீரர்களும், இந்திய ராணுவ வீர்களும் ஏறக்குறைய 250 பேர் கைகலப்பில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது. இதன்பின் இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் அமர்ந்து அமைதிப் பேச்சு நடத்தியபின் அமைதி திரும்பியது.

இந்தநிலையில் மீண்டும் இரு நாட்டு ராணுவமும் படைகளைக்குவித்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டு வருகிறது. இந்த சூழலைக் கவனித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா சீனா எல்லைப்பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
ஆனால், அதற்கு மத்தியஅரசு சார்பி்ல் இரு நாடுகளுக்கு இடையிலான எல்லைப்பிரச்சினையை அமைதிப்பேச்சின் மூலம் பேசித் தீர்க்கப்படும் எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
இந்தியா - சீன எல்லை விவகாரத்தில் மத்திய அரசு அமைதி காக்கிறது. சீனாவுடனான எல்லை பிரச்சினை சந்தேகத்திற்கு வழிவகுக்குகிறது. தற்போதைய சூழ்நிலை குறித்து மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும். எல்லையில் என்ன நடக்கிறது என்பதை மத்திய அரசு வெளிப்படைத்தன்மையுடன் கூற வேண்டும் என பதிவிட்டுள்ளார்.






0 Comments