எண்ணெய் வளம் அதிகம் கொண்ட வளைகுடா நாடுகள் இன்று வரை வெளிநாட்டவர்களுக்குக் குடியுரிமை வழங்கப்படாத நிலையில் கத்தார் முதன் முதலாகக் குறிப்பிட்ட அளவிலான நிரந்த குடியுரிமை வழங்க முடிவு செய்துள்ளது.
இது குறித்துக் கத்தார் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் ஒவ்வொரு ஆண்டு 100 நபர்களுக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

கத்தார் குடியுரிமை பெறுவதற்கான விண்ணப்பங்கள் இப்போது பெறப்பட்டு வருவதாகவும் செப்டம்பர் 4ம் தேதி நிரந்தரக் குடியுரிமை பெறப்போகும் 100 நபர்கள் தேர்வு செய்யப்பட இருப்பதாகவும் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

சவுதி அரேபியா, ஐக்கிய அமீரகம், பகிரின் மற்றும் எகிப்த் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் வெளிநாட்டவர்களைக் கூடுதல் நாட்கள் தங்க அனுமதி அளித்தாலும் இது வரை நிரந்தரக் குடியுரிமையினை அளிக்காத நிலையில் கத்தரின் இந்த முடிவு சர்ச்சையினை ஏற்படுத்தி வருகிறது.

கத்தார் பெண்ணை வெளிநாட்டவர்கள் திருமணம் செய்துகொண்டால் அவரது கணவர் மற்றும் குழந்தைகள் உட்பட அனைவருக்கும் கத்தாரில் நிரந்தரக் குடியுரிமை அளிக்கப்படும். அது மட்டும் தனித்திறன் படைத்தவர்களுக்குக் கத்தாரில் நிரந்தரக் குடியுரிமை பெற சிறப்பு அனுமதிகள் வழங்கப்படுகிறது.