2015-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு வேலைக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை 7.6 லட்சம் ஆக இருந்த நிலையில் 2017-ம் ஆண்டு 3.7 லட்சம் ஆகச் சரிந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்தச் சரிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

2017-ம் ஆண்சு அதிகளவில் அந்நிய செலாவணியைப் பெற்ற நாடு இந்தியா தான் என்று உலக வங்கி தெரிவித்துள்ள நிலையில் அதில் 56 சதவீதம் வளைகுடா நாடுகளான சவுதி அரேபியா,குவைத், ஐக்கிய அமீரகம், கத்தார், பஹ்ரைன் மற்றும் ஓமனில் இருந்து பெற்றுள்ளதாகத் தரவுகள் கூறுகின்றன. ஆனால் வேலைக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை எவ்வளவு சரிந்துள்ளது என்ற விவரங்களை இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.
ஐக்கிய அமீரகம்
2015-ம் ஆண்டு ஐக்கிய அமீரகத்தில் 2,25,512 இந்தியர்கள் வேலைக்காகச் சென்ற நிலையில், 2016-ம் ஆண்டு 1,63,716 நபர்களாகவும், 2017-ம் ஆண்டு 1,49,962 ஆகவும் எண்ணிக்கை 33 சதவீதம் வரை சரிந்துள்ளது.
சவுதி அரேபியா
2015-ம் ஆண்டுச் சவுதி அரேபியாவிற்கு 3,06,642 லட்சம் நபர்கள் இந்தியாவில் இருந்து வேலைக்காகச் சென்றுள்ள நிலையில் 2016-ம் ஆண்டு 1,65,355 எனவும், 2017-ம் ஆண்டு 78,611 எனவும் எண்ணிக்கையானது 74 சதவீதம் வரை சரிந்துள்ளது.
குவைத்
2015-ம் ஆண்டுக் குவைத்திற்கு 66,543 நபர்கள் இந்தியாவில் இருந்து வேலைக்குச் சென்றுள்ள நிலையில் 2016-ம் ஆண்டு 73,384 நபர்களாக அதிகரித்தது. ஆனால் 2017-ம் ஆண்டு 56,332 நபர்களாக எண்ணிக்கை சரிந்துள்ளது.






0 Comments