பொதுவாக அரசு ஊழியர்கள் சரியான பணியாற்றுவதில்லை என்ற புகார் பொதுவாக வைக்கப்பட்டாலும், சில உண்மையாகவும், நேர்மையாகவும் பணியாற்றுகின்றனர். ஆனால் இந்த எண்ணிக்கை குறைவாக இருப்பதே எல்லோருக்கும் பிரச்சனை.

இது இந்தியாவில் மட்டும் தான் உள்ளதா என்றால், நிச்சயம் இல்லை. வளைகுடா நாடுகளிலும் அது மிகப்பெரிய பிரச்சனையாக வெடித்துள்ளது.
குவைத் நாட்டின் வருடாந்திர பட்ஜெட் அறிக்கையில் பாதி நிதித்தொகை அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் சம்பளமாக உள்ளது. இந்நிலையில் குவைத் அரசு இந்தச் சம்பள செலவுகளைக் குறைக்க வேண்டும் எனப் பல்வேறு நடைமுறையை அமலாக்கம் செய்து வருகிறது.
இதன் ஒருபகுதியாகக் குவைத் அரசு அனைத்து அரசு பணியிடங்களிலும் பயோமெட்ரிக் ரீடர் வைத்துக் காலையில் அரசு ஊழியர்களின் வருகையைப் பதிவு செய்து பணி நேரத்தைக் கணக்கிட துவங்கியது. இப்புதிய மாற்றம் ஓப்பியடிக்கும் ஊழியர்களுக்குப் பெரிய சிக்கலாக வெடித்துள்ளது.
பயோமெட்ரிக் ரீடர் அமலாக்கம் செய்த 3 மாத காலத்தில் மட்டும் மிகவும் குறைவான நேரத்திற்குப் பணியாற்றிய சுமார் 5000 ஊழியர்கள் ராஜினாமா செய்துள்ளனர். இதுமட்டும் அல்லாமல் பல அரசு ஊழியர்கள் மத்தியில் இப்புதிய உத்தரவில் சிக்கிவிடுவோமோ என்ற அச்சத்திலும் உள்ளனர். இதில் பலர் அலுவலகத்திற்கே வருவதில்லை எனக் குவைத் நாட்டின் நிதித் துறை செயலாளர் கலீபா ஹாமாடா தெரிவித்துள்ளார்.






0 Comments