2018-ம் ஆண்டு வளைகுடா வாட் வரி ஆட்சி முறை அமலுக்கு வர இருப்பதால் வரி அமைப்பு போன்ற சிறப்புத் திறன் கொண்ட ஊழியர்களைப் பணிக்கு எடுப்பது அதிகரிக்கும் என்று நமக்குக் கிடைத்துள்ள தகவல்கள் கூறுகின்றன.

வளைகுடா நாடுகள் எண்ணெய் மட்டும் இல்லாமல் பிற துறைகளில் இருந்து எப்படி வருவாய் ஈட்டுவது என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. அதன் நோக்கமாக டிஜிட்டல் முறைக்கு மாறுவது மற்றும் வாட் வரி அறிமுகம் போன்றவை எல்லாம் அறிமுகம் ஆக உள்ள நிலையில் பின் வரும் திறன் இருந்தால் உங்களது அதிகச் சம்பளத்துடன் வேலை வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.
கணக்கியல் மற்றும் நிதி துறை
கணக்கியல் மற்றும் நிதி துறையில் 5 முதல் 10 ஆண்டுகளுக்கும் அதிகமாக அனுபவம் உள்ளவர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் கிடைக்க உள்ளன.
தொழில்நுட்பம்
வளைகுடா நாடுகளில் உள்ள அரசுத் துறைகள் மற்றும் பல தனியார் நிறுவனங்கள் தங்களை டிஜிட்டல் முறைக்கு மாற்றி வருவதால் தொழில்நுட்ப துறையில் அதிக வேலை வாய்ப்புகள் கிடைக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
நிதி சேவைகள்
நிதி சேவைகள் துறையினைத் தேர்ந்து எடுத்துப் படிக்க இருப்பவர்களுக்குப் பயம் ஏதும் வேண்டாம். வரும் ஆண்டுகளில் இந்தத் துறையில் பண மோசடி வல்லுநர்கள் போன்ற பணிகளுக்கு அதிக வேலை வாய்ப்புகள் துபாயில் உருவாக உள்ளன.






0 Comments