தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் எண்ணிக்கை 70 ஆயிரத்தை கடந்தது.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 3,509 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 67,468 ஆக உயர்ந்துள்ளது. இதில் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 150 பேரும் அடக்கம்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 45 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 911 ஆக உயர்ந்துள்ளது. இன்று கொரோனாவால் உயிரிழந்த 45 பேரில் 28 பேர் சென்னையை சேர்ந்தவர்களும், செங்கல்பட்டு 5, திருவள்ளூர் 4, திருவண்ணாமலை 3, மதுரை மற்றும் விருதுநகரில் தலா 2, திருச்சியில் ஒருவராகும்.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 2,236 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தமாக 39,999 பேர் குணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது 30,064 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதியான 70,977பேரில், 43,835 பேர் ஆண்கள், 27,122 பேர் பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 20 பேர் ஆகும். தமிழகம் முழுவதும் இதுவரை 10,08,974 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இன்று மட்டும் 32,543 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் 1,834 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 47,650 ஆக உயர்ந்துள்ளது.
மதுரை - 204, செங்கல்பட்டு 191 வேலூர் 172, திருவள்ளூர் 170, ராமநாதபுரம் 140, காஞ்சிபுரம் 98, சேலம் 89, தேனி 72, திருவண்ணாமலை 55, கன்னியாகுமரி 53, விழுப்புரம் 40, கோயம்புத்தூர் 29, விருதுநகர் 28, திருச்சி 27, சிவகங்கை மற்றும் கள்ளக்குறிச்சியில் 25, தூத்துக்குடி 24, தஞ்சாவூர் 22, கடலூர் 21, ராணிப்பேட்டை 20, திருப்பத்தூர் 18, திண்டுக்கல் 15, தென்காசி 12, திருநெல்வேலி 11, அரியலூர் மற்றும் நாகப்பட்டினத்தில் தலா 10, பெரம்பலூர் 8, திருப்பூர் 7, ஈரோடு மற்றும் திருவாரூரில் தலா 5, கரூர் 3, நீலகிரி 2, தர்மபுரி, நாமக்கல் மற்றும் புதுக்கோட்டையில் தலா ஒருவருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதியானது.






0 Comments