குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, வடகிழக்கு டில்லியில், கடந்த பிப்ரவரி மாதம் நடந்த கலவரத்தில், ஹிந்துக்களை குறிவைத்து தாக்கிய கும்பலால், இனிப்பு கடை ஊழியர், உயிருடன் தீயிட்டு கொளுத்தப்பட்டதாக, டில்லி நீதிமன்றத்தில், போலீசார் தெரிவித்தனர்.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக, வடகிழக்கு டில்லியில், கடந்த பிப்ரவரியில், கலவரம் வெடித்தது. அப்போது, அனில் ஸ்வீட்ஸ்' என்ற இனிப்பு கடையின் குடோனுக்கு, கலவரக்காரர்கள் தீ வைத்தனர். இதில், அக்கடையின் ஊழியர், தில்பார் நெகி என்பவர், தீயில் கருகி உயிரிழந்தார். இக்கலவரம் தொடர்பாக, 12 பேரை, போலீசார் கைது செய்தனர்.
பல்வேறு பிரிவுகளில், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுவரை, நான்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளன.இந்நிலையில், ஐந்தாவது குற்றப்பத்திரிகை, டில்லி நீதிமன்றத்தில், நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: வடகிழக்கு டில்லியின் பல்வேறு பகுதிகளில், கடந்த பிப்ரவரியில் மத கலவரம் வெடித்தது.
பிரிஜ்புரி புலியா பகுதியில் இருந்து, மாலை 3:00 மணி முதல் கும்பலாக வரத்துவங்கி கலவரக்காரர்கள், ஹிந்துக்களின் சொத்துக்களை, விடியவிடிய குறிவைத்து, தாக்கினர். அப்போது, அனில் ஸ்வீட்ஸ்' என்ற இனிப்பு கடையின் குடோனுக்கு தீ வைத்தனர். இதில், அக்கடையின் ஊழியர், தில்பாக் நெகி என்பவர், தீயில் கருகி உயிரிழந்தார். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.






0 Comments