''சர்வதேச தடுப்பூசி கூட்டணி அமைப்பான, 'காவி'க்கு, 12 கோடி ரூபாய் வழங்குவததாக பிரதமர், மோடி தெரிவித்துள்ளார்.ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில், சர்வதேச தடுப்பூசி கூட்டணி அமைப்பான காவியின் மாநாடு, நேற்று துவங்கியது.
மாநாட்டை பிரிட்டன் பிரதமர், போரீஸ் ஜான்சன் துவக்கி வைத்தார்.'வீடியோன கான்பரன்சிங்' வழியாக நடந்த இந்த மாநாட்டில் பிரதமர், மோடி, பேசியதாவது:-

சர்வதேச தடுப்பூசி கூட்டணி அமைப்பான காவிக்கு, இந்தியா சார்பில், 12 கோடி ரூபாய் வழங்கப்படும். இந்தியாவின் தேவையால், தடுப்பூசி விலை, சர்வதேச அளவில் குறையும்.உலக தரம் வாய்ந்த மருந்துகள், தடுப்பூசிகள் இந்தியாவில் குறைந்த விலையில் தயாரிக்கப்படுகின்றன. கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தையும், இந்தியாவால் தயாரிக்க முடியும்.

இவ்வாறு மோடி பேசினார். மாநாட்டில், 33 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.