மின்சாரகட்டண உயர்வு, அபராத தொகை வசூல் குறைக்கவேண்டி திமுக கோரிக்கை. மாநிலம் முமுவதும் மின்கட்டணம் உயர்ந்துவிட்டது. குறிபிட்டதேதியில் கட்டவில்லை என்றால் அபராதம் வசூல் செய்யபடுகிறது. கொரோனா நேரத்தில் மக்கள் கஷ்டபடுகிற நேரத்தில் கட்டண வசூல் செய்வது மக்களை வேதனை அடைய செய்வது ஆகும்.

எனவே கட்டண உயர்வுயை ரத்து செய்யவேண்டும். அபராத வசூலை நிறுத்த வேண்டும் என்று ஆரல்வாய்மொழி நகர திமுக, தோவாளை ஒன்றிய திமுக சார்பாக ஒன்றிய செயலாளர் நெடுசெழியன், நகரசெயலாளர் சுப்பிரமணியன், முன்னால் பஞ்., துணைதலைவர் நாகராஜன், தலைமை கழக பேச்சாளர் செல்வகுமார், இளைஞரணி சேதுவேல், ஒன்றிய சிறுபான்மை பிரிவு துணைஅமைப்பாளர் ஜோசப் ஆகியோர் ஆரல்வாய்மொழி மின்சாரவாரிய செயற்பொறியாளரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.






0 Comments