கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியால் 2020-2021 ஆம் ஆண்டுக்கான பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், தக்கலை, திருவட்டாறு, குழித்துறை ஆகிய நான்கு கல்வி மாவட்டங்கள் உள்ளன. இந்த கல்வி மாவட்டங்களின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் சுமார் 500 உள்ளது. இந்தப் பள்ளிகளுக்கு 2020-2021 ஆம் ஆண்டுக்கான பாட புத்தகங்கள் கல்வி மாவட்டம் தோறும் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்த பாட புத்தகங்களின் லாரிகள் மூலம் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. நேற்று 24ஆம் தேதி திடீரென தக்கலை கல்வி மாவட்ட அலுவலகம் வந்த மாநில பள்ளி, கல்வி இணை இயக்குனர் நாகராஜ முருகன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில் தக்கலை கல்வி மாவட்ட அலுவலர் ராமச்சந்திரன் நாயர் உட்பட பணியாளர்கள் இருந்தனர். இதுகுறித்து பள்ளிக் கல்வி இணை இயக்குனர் கூறியதாவது தமிழக அரசின் உத்தரவுப்படி வரும் கல்வி ஆண்டுக்கான புத்தகங்கள் அந்தந்த பள்ளியில் கொண்டு சேர்ப்பது காலத்தின் கட்டாயமாகும். இந்த பள்ளிகள் திறந்தவுடன் காலம் தாழ்த்தாமல் புத்தகங்கள் மாணவர்களுக்கு கிடைக்க செய்வதே முக்கிய நோக்கமாகும் என தெரிவித்தார்.






0 Comments