தக்கலை சுற்றுவட்டார பகுதி மக்களை கொரோனா வைரஸ் மிகவும் கொடுமையாக அச்சுறுத்தி வரும் நிலையில் டாக்டர் ஒருவரையும் தொற்றிக் கொண்டது.
கொரோனா வைரஸ் கடந்த 93 நாட்களாக மக்களை அச்சுறுத்தி வருகிறது. சென்னையிலிருந்து கேரளபுரம் வந்த இருவருக்கும் வலவூர் மற்றும் பத்மநாபபுரத்தை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அரசின் ஊரடங்கு உத்தரவால் மக்கள் சமூக இடைவெளியுடன் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.

ஆனாலும் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலையில் உள்ள மக்களை கொரோனா துரத்தி செல்கிறது. இந்நிலையில் இரவு 8 மணிக்கு முன் கடைகளை அடைக்க வேண்டும் என்ற உத்தரவும் உள்ளது. ஆனால் காவல் துறையினருக்கு சில கடைக்காரர்கள் அதிக வேலைப்பளுவை தலை மேல் சுமத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். தமிழகத்தில் உள்ள ஏனைய மாவட்டங்களை விட கன்னியாகுமரி மாவட்ட மக்கள் அரசு அதிகாரிகளின் நல்லுறவோடு செயல்படுவதால் "அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் கடைமையடா" என்ற பாடல் வரிகளின் அடிப்படையில் முக கவசம் அணிந்து மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை தேடி செல்வது காலத்தின் கட்டாயமாக உள்ளது.

இது போன்ற தனியார் மருத்துவமனைகளிலும் திறந்து செயல்பட துவங்கின. தக்கலை மேட்டுக்கடை பகுதியை சேர்ந்த டாக்டர் ஒருவர் அரண்மனை சாலையில் ஆஸ்பத்திரி நடத்தி வந்தார். ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளை எச்சரிக்கையுடன் வர கைகழுவ வசதிகளும் செய்து வைத்திருந்தார். எந்நேரமும் முக கவசம் அணிந்த படி நோயாளிகளை கவனித்து வந்தார். இந்நிலையில் அவரை வைரஸ் தொற்றி கொண்டதாக தெரிகிறது. இதனால் அவரது நண்பர்கள் உறவினர்கள் மற்றும் நோயாளிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். நோயாளிகளை நல்லமுறையில் கவனித்து அனுப்பும் டாக்டருக்கு இந்நோய் எப்படி தோற்றி உள்ளது என்பதை புரியாமல் அனைவரும் வருந்துகின்றனர். இந்நிலையில் டாக்டரை சார் ஆட்சியர் சரண்யா அறிவுரைப்படி இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் வழிகாட்டுதலில் சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

மேலும் அவரது மனைவியின் சளியும் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் பெர்பெற்றி லியோன், மருத்துவ அலுவலர் லாரன்ஸ், வட்டார மருத்துவ அலுவலர்கள் அஸ்வின் பிரதீப் ,கரிம், சுகாதார ஆய்வாளர் முத்துராமலிங்கம், மேற்பார்வையாளர் மோகன், சமுதாய நல செவிலியர் பெர்லின் ஜேனட் வசந்தா ஆகியோர் டாக்டர் வீடு மற்றும் ஆஸ்பத்திரியை ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து சுகாதாரத் துறை, பணியாளர்கள் சாலையின் ஓரம் வீடுகள், கடைகள் மற்றும் ஆஸ்பத்திரி முன் கிருமி நாசினி அடித்தனர். ஆக மொத்தத்தில் கன்னியாகுமரி மாவட்ட மக்களை கொரோனா எந்த நிலையில் கொண்டு நிலைக்கு கொண்டு செல்லும் என்பதையும் அரசு என்ன செய்யப்போகிறது என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.