கொரோனா காலகட்டத்தில் மக்களை வஞ்சிக்கும் மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத செயல்பாடுகள் கண்டித்தும் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் எஸ்டிபிஐ கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கை கண்டித்து மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் எஸ்டிபிஐ சார்பில் இன்று நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டது. குறிப்பாக வெளிநாடுகளில் தங்கி பணிபுரிந்து வரும் தமிழகத்தை சேர்ந்தவர்களை பத்திரமாக மீட்டு அவர்களை சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டும். பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும். மின் கட்டணம் டோல்கேட் கட்டணம் ஆகியவற்றை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். கொரோனா காலம் என்பதால் ரேஷன் அரிசி பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும். கல்வி கட்டணத்தை அரசே வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கை வைக்கப்பட்டது. இதில், மாவட்ட தலைவர் சுல்பிகர் அலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.