கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தொடங்கிய சில நாட்கள் லடாக் பகுதியில் சீன படை இறங்கியது. இதையடுத்து இந்திய படை வீரர்களும் களம் இறக்கினர். இதில் இந்திய வீரர்கள் பலர் பலியாயினர். சைனாவின் அத்துமீறிய செயலைக் கண்டிக்கும் விதமாக இந்திய மக்கள் கடும் கண்டன குரல் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் அறிவுறுத்தலின்படி தக்கலை வட்டார நகர காங்கிரஸ் சார்பில் குமாரபுரம் ஜங்ஷன் அரண்மனை சாலை ஆகிய இடங்களில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் தக்கலை காமராஜ் பஸ் நிலையம் அருகில் நடந்தது.

குமாரபுரத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு வட்டாரத் தலைவர் ஜான் கிறிஸ்டோபர் தலைமை தாங்க பத்மநாபபுரம் தொகுதி இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர் ராபர்ட், பேரூர் தலைவர் அலெக்சாண்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரண்மனை சாலையோரம் நடந்த நிகழ்ச்சிக்கு நகர தலைவர் ஹனுகுமார் தலைமை தாங்க ஹல்லாஜ் சாகுல் ஹமீது , இப்ராஹிம், ராஜேஷ்குமார், இயேசுதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காமராஜர் சிலை அருகே நடந்த நிகழ்ச்சிக்கு மேற்கு மாவட்ட தலைவர் ராஜேஷ் குமார் தலைமை தாங்க, மாவட்ட நிர்வாகிகள் வின்சன்ட் ராஜா, ஜோன்ஸ் இம்மானுவேல், புரோடி மில்லர், டாக்டர்கள் தம்பி விஜயகுமார், சாமுவேல்ராஜ் மற்றும் ஆமோஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மூன்று இடங்களிலும் நடந்த நிகழ்ச்சியின் போது இழந்த ராணுவ வீரர்களுக்கு மலர் தூவியும் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. ராஜேஷ்குமார் எம்எல்ஏ இறந்த வீரர்களின் தியாகம் குறித்து பேசினார். இதில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திவாகர் முன்னாள் தலைவர் ஆஸ்கார் பிரடி மற்றும் என் ஏ குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






0 Comments