தோவாளை தாலுகா தாழக்குடி பேரூராட்சி பகுதி 2 வதுவார்டு சீதப்பால். இங்கு 300 வீடுகள் உள்ளது. கடந்த சிலநாள் முன்பு சீதப்பால் அம்மன்கோவில் தெருவில் உள்ள 36 வயது மதிக்கதக்க வாலிபர் காய்ச்சல் அறிகுறிவுடன் பூதப்பாண்டி அரசு ஆஸ்பத்திரி சென்ற போது சளிமாதிரி எடுக்கபட்டு பரிசோதனை செய்ய கொரோனா உறுதிசெய்யபட்டது.
அவர் உடன் இருந்த தாய்க்கு தொற்று உறுதியானதால் தனிமைபடுத்தபட்டது. இதன் காரணமாக வட்டாரமருவத்துவர் ராஜ்குமார் தலைமையில் அப்பகுதியை சார்ந்த 66 நபர்களுக்கு சளிமாதிரி எடுக்கபட்டது. நேற்று தாழக்குடி பேரூராட்சி செயல்அலுவலர் யோகஸ்ரீ தலைமையில் சீதப்பால் அனைத்து பகுதிகளில் கிருமிநாசனி தெளிக்கபட்டு அனைத்து பொதுமக்களுக்கும் கபசுர பொடி வழங்கபட்டது. நிகழ்ச்சியில் முன்னால் பஞ்., தலைவர் ரோகினி அய்யப்பன், சுகாதாரஆய்வாளர் அய்யாகுட்டி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், தூய்மை திட்டபணியாளர்கள் கலந்துகொண்டார்கள்.