கல்குளம் தாலுகா அலுவலகம் முன் அகில இந்திய தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது.
100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்த வேண்டும் எனவும் விவசாய கடன் அத்தனையும் தள்ளுபடி செய்ய வேண்டும். கொரோனா வைரஸ் எதிரொலியில் பாதிப்பு அடைந்த அனைத்து குடும்பங்களுக்கும் மாதந்தோறும் ரூபாய் 7500/- நிவாரணம் வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

கல்குளம் தாலுகா அலுவலகம் முன் மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி நடந்த இந்த போராட்டத்துக்கு சைமன் சைலஸ் தலைமை தாங்கினார். முன்னால் வட்டச்செயலாளர் ராஜன் கோசங்களிட்டு போராட்டத்தை துவக்கி வைத்தார். ஜாண்ராஜ் போராட்டத்தை முடித்து வைத்தார். இதில் நல்லதம்பி உட்பட பலர் கலந்து கொண்டனர்.