கைத்தறி பட்டு நெசவு தொழிலாளர்கள் நிவாரண தொகையினை பெற விண்ணப்பிக்க கலெக்டர் தெரிவித்துள்ளார்.தமிழக முதல்வரின் அறிவிப்பின் படி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பதிவு பெறாத கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நெசவு செய்யும் விலையில்லா 200 யூனிட் மின்சாரம் பெற்று பயன் பெறும் 1695 கைத்தறி நெசவாளர்களுக்கு ஊரடங்கு கால நிவாரண நிதியாக தலா ரூ. 2000 வீதம் வழங்க வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் அரசாணைபடி ரூ. 33,90,000 ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
தகுதியான பயனாளிகள் நிவாரண தொகையினை பெற மாவட்ட கலெக்டர் அலுவலக இணைப்பு கட்டிடம், 2 ம் தளம், அறை எண் 15 என்ற முகவரியில் செயல்படும் நாகர்கோவில் சரக கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பத்தினை பெற்று பூர்த்தி செய்து மின் இணைப்பு அட்டை நகல், மின் கட்டணம் செலுத்தியதற்கான சமீபத்திய ரசீது நகல், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகிய இணைப்புகளுடன் உதவி இயக்குனர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டு உள்ள தனிப்பிரிவில் சமர்ப்பித்து பயன் அடைய வேண்டும் என்று கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார்.