நாகர்கோவில் அருகே காற்றில் முறிந்து விழுந்த தென்னை மரத்தை தீயணைப்பு துறையினர் அகற்றினர்.நாகர்கோவில் அருகே ஒழுகினசேரி பகுதியில் நின்ற தென்னை மரம் காற்றில் முறிந்து விழுந்ததில் மின் கம்பியில்பட்டு ரோட்டோரம் விழுந்தது. இது குறித்து நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
நிலைய அலுவலர் துரை தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று காற்றில் முறிந்து விழுந்த தென்னை மரத்தையும், இடையூறாக நின்ற தென்னை மரத்தையும் அகற்றி போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் அகற்றினர்.