மார்த்தாண்டத்தில் நடைபாதையை ஆக்கிரமித்து பூக்கடை போன்றவை வைக்கப்பட்டுள்ளதால் அவ்வழியாக நடந்து செல்லும் பாதசாரிகளும், பெண்களும் அவதி அடைந்து வருகின்றனர்.

மார்த்தாண்டம் பகுதியில் நிலவிய போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த இரும்பில் ஆன மேம்பாலம் அமைக்கப்பட்டது. ஆனால், ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால் தற்போதும் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து கொண்டே செல்கிறது. இது ஒருபுறம் இருக்க வாகனங்கள் தாறுமாறாக செல்வதால் பாதசாரிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். நடைபாதை வழியாக செல்ல முயன்றால் பூக்கடை போன்றவை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளதால் நடந்து செல்லவும் இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
நடைபாதைகளில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளை ஒட்டி ரோமியோக்கள் நின்று அவ்வழியாக நடந்து செல்லும் இளம்பெண்களிடம் வம்பு இழுக்கும் செயல்கள் அவ்வப்போது அதிகரித்து வருகிறது. இதனால், பெண்களும், பாதசாரிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இளம்பெண்கள் மற்றும் பாதசாரிகளின் நலன்கருதி மார்த்தாண்டம் பகுதியில் நடைபாதையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டள்ள பூக்கடைகளை அப்புறபடுத்து நகராட்சி நிர்வாகமும், போலீசாரும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.






0 Comments