மார்த்தாண்டம் வழியாக கேரளாவிற்கு கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசியையும், சொகுசுகாரையும் பறிமுதல் செய்த போலீசார் கார் டிரைவரையும் கைது செய்தனர்.
மார்த்தாண்டம் இன்ஸ்பெக்டர் ஆதலிங்க போஸ் தலைமையிலான போலீசார் மார்த்தாண்டம் அருகே வெட்டுவெந்நி பகுதியில் வாகன கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கேரள பதிவெண் கொண்ட சொகுசுகாரை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர். இதில் 1 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து கேரளாவிற்கு கடத்த முயன்றது தெரியவந்தது.

இதைதொடர்ந்து கார் டிரைவர் நாகர்கோவில் அருகே சூரங்குடி பகுதியை சேர்ந்த சுவாமிநாதன் (51) என்பவரை கைது செய்த போலீசார் சொகுசுகாரையும் பறிமுதல் செய்தனர். சம்பவம் தொடர்பாக வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.