சுசீந்திரம் வருவாய் நிர்வாகத்திற்கு உட்பட்ட சுசீந்திரம், வழுக்கம்பாறை, ஆசிரமம் அக்கைரை, தேரூர் உட்பட அனைத்து கிராமங்களிலும் இந்த வாகன பிரச்சாரம் நடந்தது.
அந்நிய ஊர்களிலிருந்து சுசீந்திரம் பகுதிக்கு அரசுக்குத் தெரியாமல் வருகை தந்தவர்கள் குறித்து விபரம் அளிப்பது குறித்தும், அனைவரும் சுகாதாரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வலியுறுத்தியும் வாகன பிரச்சாரம் நேற்று காலையில் துவக்கப்பட்டது.

சுசீந்திரம் வருவாய் அலுவலர் ஜாக்குலின் இந்த வாகன பிரச்சாரத்தை துவக்கி வைத்து பேசினார். சுசீந்திரம் கிராம நிர்வாக அலுவலர் சுபா, முன்னாள் பஞ்., தலைவர் முருகேஷ், கிராம நிர்வாக உதவியாளர் மணி உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த வாகன பிரச்சாரம் சுசீந்திரம் வருவாய் கிராமங்கள் உட்பட அனைத்து பகுதிகளுக்கும் சென்று மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.