தக்கலை அரசு மருத்துவ மனையில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த இரத்ததானம் முகாமை எம்.எல்.ஏ-க்கள் முன்னிலையில் எம்பி துவக்கி வைத்தார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தியின் 50-வது பிறந்தநாள் குமரிமாவட்டம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி 18-ம் தேதி குமரி மேற்கு மாவட்டத்திலுள்ள தக்கலை அரசு மருத்துவமனையில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் இரத்ததானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ் தலைமை தாங்கினார். கிள்ளியூர் குளச்சல் எம்.எல்.ஏ-க்கள் ராஜேஷ்குமார் மற்றும் பிரின்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இரத்ததான கொடையாளர்களின் இரத்த பரிசோதனைக்கு பின் இரத்ததானம் வழங்கும் நிகழ்ச்சி துவங்கியது. இந்நிகழ்ச்சியை எம்.பி வசந்தகுமார் துவக்கி வைத்தார். சுமார் 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இரத்ததானம் வழங்கினர்.
கொடையாளர்களின் இரத்தத்தை மருத்துவமனை டாக்டர்கள் சாஸ்தா, ஜெயசுதா ஆகியோர் வழிகாட்டுதலில் செவிலியர் ராமலெட்சுமி, ஒருங்கிணைப்பாளர் ராஜன் ஆகியோர் சேகரித்தனர். இதில் நகர காங்கிரஸ் தலைவர் ஹனுகுமார், சுமன், ஜோண், ஆல்பர்ட், ராபர்ட், புரோடிமில்லர், வின்சென்ட் ராஜா உட்பட மாவட்ட ஒன்றிய அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






0 Comments