சென்னை டூ குமரி போலி பாஸ் மூலம் வந்தவர் கைது செய்யப்பட்டு அவரது கார் பறிமுதல் செய்யப்பட்டது. காரில் வந்தவர்கள் 5 பேர் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கொரோனா எதிரொலியால் சென்னை வாசிகள் பல வழிகளில் குமரி வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். நேற்று காலையில் ஆரல்வாய்மொழி செக்போஸ்டில் வருவாய்த்துறை துணை தாசில்தார் மேரிஸ்டெல்லா சோதனையில் இருந்த போது சென்னையில் இருந்து வந்த காரை நிறுத்தி பாஸ் கேட்ட போது கார் டிரைவர் சென்னை சூசைஜெயபிரகாஷ் பாஸை எடுத்து கொடுக்க அதிகாரிகள் கியூஆர் கோடை ஸ்கேன் செய்த போது அது போலி என தெரியவந்தது.

விசாரணையில் சென்னையில் வாடகைக்கு ஆசைபட்டு போலி பாஸ் தயார் செய்து 5 பேரை குமரி மாவட்டம் பொழிக்கரை என்ற பகுதிக்கு ஏற்றி வந்தது தெரியவந்தது. காரில் வந்த 5 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்து அவர்கள் கன்னியாகுமரி விடுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஆரல்வாய்மொழி போலீஸ் போலியான இபாஸ் தயார் செய்து அரசை ஏமாற்றி பொதுமக்களை ஏற்றி வந்தாக சூசைஜெயபிரகாஷை கைது செய்து காரை பறிமுதல் செய்தனர்