முளகுமூட்டில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழி மற்றும் கொரோனா நோய் எதிர்ப்பு மருந்து வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. முளமூடு நாஞ்சில் பால் பதனிடும் நிலையத்தில் உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழி எடுக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு நிலைய மேலாண்மை இயக்குநர் ஜெரால்டு ஜெஸ்டின் தலைமை தாங்கினார். நிதி பரிபாலகர் ஆண்ட்ரூஸ் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற நிலைய பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதைத்தொடர்ந்து அனைவருக்கும் கொரோனா நோய் எதிர்ப்பு மருந்து ஆர்சனிகம் ஆல்பம் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

இதை வழங்கிய அருட்தந்தையர்கள் நாம் நாமாக வாழ சமூக இடைவெளியை கடைவிடித்தும், எப்போதும் முககவசம் அணிந்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.