தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், கொரோனா பரவலை தடுக்க ஜூன் 30-ம் தேதி வரை 5-ம் கட்டமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இருப்பினும் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,295 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 1079 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், 5-ம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிய உள்ள நிலையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவது குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 10 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ நிபுணர் குழுவுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார். இதில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.