வில்லுக்குறி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது இளம்பெண் பிளஸ் 2 வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார். இதற்கிடையே அவரது அண்ணன் முறையான கல்லூரி மாணவருக்கும், இளம்பெண்ணுக்கும் காதல் மலர்ந்தது.
தொடர்ந்து 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துக் கொண்டனர். இதனால் இளம்பெண் கர்ப்பமானார். இந்த விவகாரம் 3 மாதங்களுக்கு பிறகு தான் பெற்றோருக்கு தெரிய வந்தது.

இதையடுத்து அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இளம்பெண்ணின் கர்ப்பத்தை கலைக்க சென்றுள்ளனர். இதில் இளம்பெண்ணுக்கு இரத்த போக்கு ஏற்பட்டுள்ளது. அதை தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவரை பரிசோதித்த டாக்டர் இளம்பெண் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறினர். உடனே ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு செல்ல்மாரும் கூறினர். இதைதொடர்ந்து இளம்பெண்ணின் உறவினர்கள் ஆசாரிப்பள்ளத்திற்கு கொண்டு சென்றனர்.

தற்போது இளம்பெண் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து குளச்சல் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தார்.

இந்நிலையில் இளம்பெண்ணின் கர்பத்துக்கு காரணமான, அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் சஞ்சுவை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை நாகர்கோவில் மகிளா கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.