குமரியில் கொரோனா பாதிப்பு 360ஐ தாண்டியது. தூத்தூரில் மட்டும் 57 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது. வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் மட்டுமின்றி அவர்களை சார்ந்தவர்களுக்கும் தொற்று வேகமாக பரவிவருகிறது.

நேற்று நிலவரப்படி, பாதிப்பு 20 ஆக இருந்தது. இதில் சின்னமுட்டம் துறைமுக பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் ஒருவரும் அடங்குவர். ஏற்கனவே சின்னமுட்டத்தில் லோடுமேன் ஒருவர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இது தவிர தூத்தூரில் மேலும் 10 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. அங்கு பாதிப்பு எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது. சின்னத்துறையில் ஒருவர் பாதிக்கபப்ட்டுள்ளார். இன்ஸ்பெக்டர் ஒருவரும், பட்டாலியன் போலீஸ் 2 பேரும் பாதிக்கப்பட்டு இருந்தனர். தற்போது ஆயுதப்படை போலீஸ் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளார். அவரை சார்ந்த அனைவரும் பரிசோதனை செய்யவேண்டிய நிலை உள்ளது.

நேற்று மாலை வரை மொத்த பாதிப்பு 353 ஆக இருந்தது. இந்நிலையில் இரவு இரண்டாவது பரிசோதனை முடிவு வந்தது. இதில் 3 வயது குழந்தை உள்பட 11 பேருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து குமரியில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 364 ஆக உயர்ந்தது.

பாதிக்கப்பட்டவர்கள் ஊர் விபரம்:

குமரி மாவட்டத்தில் நேற்று 31 பேர் பாதிக்கபப்ட்டுள்ளனர். கருங்கல் – 21 வயது ஆண், படந்தாலுமூடு – 20 வயது ஆண், 66 வயது ஆண், 55 வயது ஆண், தூத்தூர் – 56 வயது பெண், 25 வயது பெண், 55 வயது ஆண், 26 வயது ஆண், 60 வயது பெண், 26 வயது பெண், 50 வயது ஆண், 40 வயது பெண், 36 வயது ஆண், 39 வயது பெண், 34 வயது பெண், 22 வயது ஆண், 50 வயது பெண், வடக்கு குண்டல் – 44 வயது பெண், அஞ்சுகிராமம் கனகப்பபுரம் – 49 வயது ஆண், சுசீந்திரம் ஆஸ்ரமம் – 70 வயது ஆண், 28 வயது பெண்,

சீதப்பால் – 9 வயது சிறுமி, 32 வயது பெண், 28 வயது ஆண், தோப்புவிளை – 3 வயது பெண் குழந்தை, தக்கலை – 32 வயது பெண் உள்பட 31 பேர் பாதிக்கபப்ட்டுள்ளனர்