கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் ஆசாரிபள்ளம் மருத்துவமனை ஊழியர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் தன் உயிரை துச்சமென நினைத்து தன் பணியில் சிறப்பாக செயல்பட்டு உலகை அச்சுருத்தும் கொரோனோ நோயினால் பாதிக்கபட்டு மருத்துவ சிகிக்சை பெரும் கொரோனோ வார்டில் பணிபுரியும் தூய்மைபணியாளர்களுக்கு அரிசி, காய்கறிகள், பழங்கள் வழங்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் P.ஹிமாம் பாதுஷா தலைமையில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் Dr.அருள்பிரகாஷ் முன்னிலையில் ஆசாரிபள்ளம் மருத்துவ மனையில் வைத்து வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் பயனாளிகளுக்கு தலைவர் M.இப்ராஹிம் கான், பொருளாளர் H.நசீர் உசைன், மாவட்ட துணைசெயலாளர் S.R.ஹாஜிபாபு Frmc, Dr ரெனிமோள், Drஜாண்கிறிஸ்டோபர், மாநகர செயலாளர் M.சேக்முகமது, மாநகர துணைத்தலைவர் K.சேக்செய்யதலி,மருத்துவ பணியாளர் I.அஸ்கர் போன்றவர்கள் கலந்து பொருட்களை வழங்கினர்






0 Comments