கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பின் தக்கலை நகரம் சார்பாக நகர தலைவர் செய்யது அலி அவர்களின் ஏற்பாட்டில் இன்று தக்கலை மெக்காய் பாளையம் பள்ளிவாசல் அருகில் வைத்து கொரோனோ தொற்றுநோய் தடுப்பு ஹோமியோபதி மருந்து மற்றும் முக கவசம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தலைவர் இப்ராஹிம் கான் பொதுச் செயலாளர் ஹிமாம் பாதுஷா தலைமையில் நடைபெற்றது.
தக்கலை ஜமாஅத் செயலாளர் சிராஜீத்தீன் கூட்டமைப்பின் பொருளாளர் நசீருதீன் துணைச் செயலாளர் ஹாஜி பாபு தக்கலை F.S. முபாரக் கூட்டமைப்பின் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வழக்கறிஞர் சேக் முகமதுஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கொரோனோ நோய் தடுப்பு ஹோமியோபதி மருந்தினை எப்படி சாப்பிடுவது என விளக்கம் அளித்து மருந்தினை பொதுமக்களுக்கு நாகர்கோவில் மாஞ்சாங் குடியிருப்பு சித்த ஆயுர்வேத மருத்துவமனை டாக்டர் பிரேம் குமார் அவர்கள் அனைவருக்கும் மருந்தினை வழங்கினார்.

தக்கலை நகரத் தலைவர் செய்யது அலி திருவிதாங்கோடு கிளைத் தலைவர் செய்யது அலி
செயலாளர் அமானுத்தீன் பொருளாளர் சபீக் இளைஞர் பிரிவு தலைவர் பக்கா சாகுல் துணைத் தலைவர் பீர் முஹம்மது மற்றும் ரைசுத்தீன் மற்றும் தக்கலை சிக்கந்தர்,ஆசிக், N.M.காதர், சாதிக் ,மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பயனாளிகளும் கலந்து சிறப்பித்தனர் அதற்குப்பின் தக்கலை நகர தலைவர் செய்யது அலி வீடு வீடாக சென்று கொரோனோ தொற்று ஹோமியோபதி மருந்தினை வழங்கினார்.







0 Comments