இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5.28 லட்சத்தை கடந்துள்ளது. இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 20 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் நேற்று (ஜூன் 28) 3,940 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. நேற்று மட்டும் கொரோனா பாதித்த 54 பேர் உயிரிழந்தனர். அதில் 10 பேர் தனியார் மருத்துவமனையிலும், 44 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர்.
தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,275 ஆக அதிகரித்துள்ளது. நேற்று பாதிக்கப்பட்ட 3,940 பேரில் 3,761 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 179 பேர். நேற்று 32,948 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
இதுவரை மொத்தமாக 11 லட்சத்து 10 ஆயிரத்து 402 மாதிரிகள் சோதனையிடப்பட்டன. நேற்று கொரோனா உறுதியானவர்களில்,
2,399 பேர் ஆண்கள், 1,541 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் எண்ணிக்கை 50,745 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 31,509 மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 21 ஆகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.






0 Comments