இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,968 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 15,968 பேர் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,56,183 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் சிகிச்சை பலனின்றி 465 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,476 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 2,58,685 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் நாடுமுழுவதும் தற்போது சிகிச்சை பெற்றுவருபவர்களின் எண்ணிக்கை 1,83,022 ஆக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 1,39,010 பேரும், தலைநகர் டெல்லியில் 66,602 பேரும் தமிழ்நாட்டில் 64,603 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






0 Comments