ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவர்களை ஒடுக்க ஆப்கானிஸ்தான் அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் ஹெல்மெட் மாகாணம் சான்கின் மாவட்டத்தில் உள்ள கால்நடைச் சந்தை நேற்று காலை அதிகமான மக்கள் கூட்டத்துடன் பரபரப்பாக இயங்கிகொண்டிருந்தது.
அப்போது திடீரென சந்தையில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்து சிதறியது. குண்டு வெடிப்பில் சிக்கி 10 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த குண்டுவெடிப்புக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனால் தலீபான் பயங்கரவாதிகளே இந்த தாக்குதலை நடத்தியதாக ஆப்கானிஸ்தான் அரசு குற்றம் சாட்டியுள்ளது.






0 Comments