பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 4 மணிக்கு நாட்டு மக்கள் முன் உரையாற்றுகிறார். அப்போது அவர் முக்கிய அறிவிப்புகள் வெளியிட வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. வைரஸ் பிறந்த சீனாவை விட இந்தியாவில் பாதிப்புகள் அதிகமாகியுள்ளது. இந்த நிலையில் நேற்றைய தினம் 6 ஆவது முறையாக லாக்டவுனை நீட்டித்து மத்திய அரசு வெளியிட்டது.

அதே சமயம் நான்- கன்டெய்ன்மென்ட் சோன்களில் கட்டுப்பாடுகளை தளர்த்தவும் அறிவிக்கப்பட்டுள்ளது. லடாக் எல்லையில் பதற்றமான சூழலே நிலவி வருகிறது. போர் மூளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இன்று மாலை 4 மணிக்கு நாட்டு மக்களிடம் மோடி உரையாற்றுகிறார் என ட்விட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மன் கீ பாத் வானொலி நிகழ்ச்சியில் நேற்று முன் தினம் பேசிய மோடி இந்திய ராணுவத்தை வெகுவாக பாராட்டினார். அது போல் சீனாவுக்கும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்கள் முன் பேசி இரு நாட்கள் கழித்து பிரதமர் மோடி இன்று மாலை பேசுவதால் சீனா குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.