கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு மாவட்டம் முழுவதும் பல முக்கிய பொறுப்புகளுக்கு நிர்வாகிகளை நியமித்து வருகிறது அதன் தொடர்ச்சியாக மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து முஸ்லிம் ஜமாஅத்களிலிருந்து முக்கியமான நபர்களை ஆலோசனை கமிட்டி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு தினந்தோறும் ஆலோசனை கமிட்டி நிர்வாகிகள் அறிவித்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக இன்று கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பின் ஆலோசனைக் கமிட்டி நிர்வாகியாக குளச்சல் ஜமாஅத் பொதுக் குழு உறுப்பினரும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளருமான அன்பு சகோதர் A.அன்வர் சதாத் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மற்றொரு ஆலோசனை கமிட்டி நிர்வாகியாக மேக்காமண்டபம் முஸ்லிம் ஜமாஅத் செயலாளர் அன்பு சகோதரர் எம்.ஹச். பகருதீன் ஆதம் என்ற யூசுப் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.