கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பிற்க்கிற்க்கு நேற்றையதினம் திருவிதாங்கோட்டை சார்ந்த சகோதரி ஒரு மனு அளித்திருந்தார்.
அந்த மனுவில் அவருடைய மகன் முகம்மது சபான் 17. 6. 2020 அன்று மார்த்தாண்டத்தில் இருந்து வீடு வரும்போது வாகனம் மோதி இடது கை செயலிழந்து ஜெயசேகரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இடது கை முழுவதுமாக நீக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பு இயன்ற உதவி செய்ய வேண்டும் என்று கேட்டு இருந்தார். நேற்றைய தினமே நமது நிர்வாகிகள் அனைவரும் சென்று பாதிக்கப்பட்ட நபரை போய் பார்த்து வந்தோம் .

இன்று முதல் கட்டமாக நிர்வாகிகள் சார்பாக ரூபாய் 25 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது. அடுத்த கட்டம் நிதி வழங்க முயற்சி செய்து வருகிறோம்.

பாதிக்கப்பட்ட சகோதரர் பூரண குணமடைந்து வீடு திரும்பியதும் அவருக்கு மாற்று கை செயற்க்கை கை கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு சார்பாக வழங்கப்படும் என உறுதியளிக்கபட்டுள்ளது.
அத்துடன் அந்த சகோதரனின் மேல்படிப்பு எந்த உயர் படிப்பாக இருந்தாலும் குறிப்பாக I.A.S போன்ற படிப்பாக இருந்தாலும் அதன் முழு பொறுப்பும் கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு ஏற்றுக் கொள்ளும் எனவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது .
இந்த நிதி வழங்கும் நிகழ்வில் நிறுவன தலைவர் இப்ராஹிம் கான் ,தலைவர் மீரான் மைதீன், பொதுச் செயலாளர் ஹிமாம் பாதுஷா, பொருளாளர் நசீர் உசைன், மாவட்ட துணைத்தலைவர் பீர் முகமது, இளைஞரணி தலைவர் அயூப் கான், நாகர்கோவில் மாநகர தலைவர் ஜாஹிர் உசேன், மாநகர துணை செயலாளர் முஹம்மது சேக், போன்றோர் கலந்து கொண்டனர்

-ஹிமாம் பாதுஷா
பொதுசெயலாளர்
கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு
நாகர்கோவில்