நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் முக்கடல் அணை, சுத்திகரிப்பு நிலையம் உட்பட பல பகுதிகளை ஆய்வு செய்தார்.
நாகர்கோவில் மாநகராட்சியின் புதிய கட்டிடம் கட்டுமானம் பணிகள், கிருஷ்ணன்கோவில் பகுதியில் அமைந்துள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், புளியடி எரிவாயு தகன கூடம் மற்றும் நாகர்கோவில் மாநகராட்சிக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் முக்கடல் அணை ஆகிய இடங்களை மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த இடங்களில் இதுவரை நடைபெற்று வந்த பணிகள் குறித்து முன்னாள் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் விளக்கி கொடுத்தார். நாகர்கோவில் மாநகராட்சியின் ஆணையராக பொறுப்பேற்று மாநகராட்சியின் முக்கிய பகுதிகளில் ஆய்வு செய்தார்