அஞ்சுகிராமம் பால்குளத்தில் இசைக்கலைஞர்கள், மேடை வடிவமைப்பாளர்கள் உள்பட 108 பேருக்கு கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு கலப்பை மக்கள் இயக்க தலைவர் பிடி செல்வகுமார் தலைமை வகித்தார். மாநில இலக்கிய அணி இணைச்செயலாளர் சதாசிவம், மாவட்ட கவுன்சிலர் நீலபெருமாள், அகஸ்தீஸ்வரம் யூனியன் சேர்மன் அழகேசன், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ஜெஸீம், அஞ்சுகிராமம் பேரூர் செயலாளர் ராஜபாண்டியன் முன்னிலை வகித்தனர்.

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் இசைக்கலைஞர்கள், மேடை வடிவமைப்பாளர்கள் உள்பட 108 பேருக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில் இரவிபுதூர் கூட்டுறவு வங்கி தலைவர் லட்சுமி சீனிவாசன், ஒன்றிய விவசாய அணிச் செயலாளர் மேட்டுக்குடி முருகன், மணிகண்டன், முன்னாள் பேரூராட்சித் தலைவர் ஜெயந்தி நாராயணன், மனோகரன், சீனிவாசன், ராமச்சந்திரன் பலர் கலந்து கொண்டனர்.