கன்னியாகுமரி மாவட்டத்தில் தோவாளை, திருவட்டார், கிள்ளியூர், அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு தாலுகாக்களில் நேற்று ஆண்டு வருமான சரிபார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.கல்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த கிராம வருவாய் நீர்வாய் நிகழ்ச்சியில் 45 வருவாய் கிராமங்களுக்கான ஆய்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்த ஆய்வை மாவட்ட கலெக்டர் நடத்துகிறார் என்பதை கேள்விப்பட்ட பொதுமக்கள் காலையிலேயே வட்டாட்சியர் அலுவலகம் வந்தனர். கொரோனா வைரஸ் எதிரொலியால் பொதுமக்கள் நேரடியாக குறைதீர்க்கும் மனு கொடுக்க முடியாது என அதிகாரிகள் கூறியதும் நிலைமையை புரிந்து கொண்ட மக்கள் சென்றுவிட்டனர்.
இந்நிலையில் ஆய்வுக்கு வந்த கலெக்டர் தக்கலை, கோதநல்லூர், குருந்தன்கோடு, முத்தலக்குறிச்சி வேளிமலை, கல்குளம் பத்மநாபபுரம் , குமாரபுரம் பகுதிகளுக்கான நில அளவீடு செய்யும் சங்கிலியை பார்வையிட்டார். தொடர்ந்து கிராம வருவாய் தீர்வாய நிகழ்ச்சியில் பங்கேற்று ஆய்வு செய்தார். இதில் 45 வருவாய் கிராமங்களை உள்ளடக்கியதாகும்.
நிகழ்ச்சியில் பயிற்சி கலெக்டர் ரிஷப், மாவட்ட ஆட்சியர் அலுவலக ஓசூர் மேலாளர் கண்ணன், நேர்முக உதவியாளர் சத்யஜோஸ், நாகர்கோவில் தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ஜெயபாரதி மாலதி, புள்ளியல் துறை இயக்குனர் கோமுதுரை பாண்டியன், தக்கலை வேளாண்மை துறை உதவி இயக்குனர் விமலா, கல்குளம் வட்டாட்சியர் ஜெகதா, துணை வட்டாட்சியர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஜமாபந்தியில் பத்மநாபபுரம் நகராட்சி சார்பில் அனைவருக்கும் கபசுரக் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.






0 Comments