கன்னியாகுமரி மாவட்ட மேடை மெல்லிசைக் கலைஞர்கள் நிவாரணம் கேட்டு கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது, கன்னியாகுமரி மாவட்டத்தில் கோயில் திருவிழா, திருமணம் மற்றும் பிற நிகழ்ச்சிகளுக்கு இன்னிசை கச்சேரிகள் நடத்தி வரும் மேடை மெல்லிசை கலைஞர்கள் இதையே தொழிலாளாக கொண்டு குடும்பம் நடத்தி வருகின்றனர். சுமார் 500 நபர்களுக்கு மேல் மெல்லிசை கச்சேரிகளை நம்பி உள்ளனர்.

இதில் ஆடியோ அமைப்போரும் அடங்குவர். இந்த ஆடியோ இசை கச்சேரிகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். வேறு நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்த முடியாது. மாவட்டத்தில் சுமார் 4 மாதங்களுக்கு மேல் எந்த நிகழ்ச்சியும் இல்லாத காரணத்தால் குடும்பங்கள் வறுமையில் உள்ளது. கிராமிய இசைக் கலைஞர்களுக்கு அரசு உதவியதை போல மேடை மெல்லிசைக் கலைஞர்களுக்கும் நிவாரண நிதி மற்றும் பொருளுதவி தந்து நிகழ்ச்சி நடத்துவதற்கும் அனுமதி வழங்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.